ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி மற்றும் மண்டலவாடி ஆகிய பகுதிகளில் கடந்த ஏழு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துவருகிறது.
குடிநீர் கோரி திருப்பத்தூர் - ஏலகிரி சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்! - vellore
வேலூர்: ஜோலார்பேட்டை அருகே கடந்த ஏழு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறி திருப்பத்தூர் - ஏலகிரி சாலையில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
water
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென திருப்பத்தூர் - ஏலகிரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்தைத நடத்தியும், ஒரு வாரத்துக்குள் பிரச்னையை தீர்ததுவிடுவோம் என்று வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.