வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவை தொகுதிவாரியாக 209 பொறுப்பாளர்கள் நியமித்து அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், ஆம்பூர் தொகுதி கே.பி.முனுசாமிக்கும், குடியாத்தம் வைத்திலிங்கத்திற்கும், வேலூர் செங்கோட்டையனுக்கும், கீழ்வைத்தியணான்ககுப்பம் எஸ்.பி.வேலுமணிக்கும், அணைக்கட்டு சி.வி.சண்முகத்திற்கும், வாணியம்பாடி தொகுதி கே.பி.அன்பழகனுக்கும் தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவைத் தேர்தல்: பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக! - C.V.சண்முகம்
வேலூர்: மக்களவைத் தேர்தலுக்கு 29 பேரை பொறுப்பாளர்களாக நியமித்து அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிமுக
மேலும், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கடம்பூர் ராஐு, எம்.சி.சம்பத், ஓ.எஸ்.மணியன், மதுசூதனன் ஆகியோருக்கும் தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அனைவரும் வரும் திங்கள்கிழமை முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் தங்கி, தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டும் எனவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Last Updated : Jul 19, 2019, 1:35 PM IST