வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
அந்த 7 பேரின் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணம் என்று உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால், அவர்களின் மரணத்திற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரமும் விளக்கமளித்தார்.