வேலூரில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பரப்புரை நேற்றுடன் ஓய்ந்த நிலையில், நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குஇயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்
வேலூர்: வேலூரில் பரப்புரை முடிந்த நிலையில், வாக்குப்பதிவுக்காக மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேலூர் தேர்தல் பணி
இந்த தேர்தலுக்காக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 179வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாகும். வாக்குச்சாவடிக்கு அனுப்படும் வாக்கு இயந்திரங்கள் அந்தந்த மையங்களில் வைத்து சரிபார்க்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.