வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 72 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட 3,732 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 2,099 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் வாக்குப்பதிவு முடிந்தபின் வாலாஜாபேட்டை ஆர்.ஐ.டி. தனியார் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்புடன் அறையில் வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் பூட்டி சீல்வைப்பு - strong room
வேலூர்: மக்களவைத் தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வாக்கு எண்ணும் அறைகளில் பூட்டி சீல்வைக்கப்பட்டன.
பாதுகாப்பு அறை
அதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம் முன்னிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகள் பூட்டி சீல்வைக்கப்பட்டன. வருகிற 9ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகளும் அன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளது.