வேலூர்:லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் லோகேஷ் கூட்டணியில் இரண்டாவது திரைப்படம் என்பதால் லியோ படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் ரசிகர்கள் உள்ளனர். முன்னதாக லியோ படத்திற்கு சிறப்பு காட்சி காலை 4 மணிக்கு திரையிட்டு கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு அரசு லியோ படத்தை ஒரு நாளைக்கு தமிழ்நாட்டில் 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் லியோ படம் திரையிடும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “வேலூர் மாவட்டத்தில் லியோ திரைப்படத்தினை திரையிடும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும், முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளிட்டுள்ளன.