தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

25 பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவு - வேலூரில் பாழடைந்த பள்ளி கட்டடங்கள் இடிப்பு

வேலூரில் பாதுகாப்பின்றி உள்ள 25 பள்ளி கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவு
பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவு

By

Published : Dec 19, 2021, 12:46 PM IST

வேலூர்:திருநெல்வேலி டவுன் பகுதியில் அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்த பள்ளியின் கழிவறை தடுப்புச் சுவர் நேற்றுமுன்தினம் (டிச.17) இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் விஸ்வரஞ்சன், அன்பழகன், சுதிஸ் என்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

நான்கு மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கட்டங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளை ஆய்வு செய்து பாதுகாப்பின்றி உள்ள கட்டங்களை இடிக்க உத்தரவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் வேலூரில் பாதுகாப்பின்றி உள்ள 25 பள்ளி கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று பள்ளி கட்டடங்களை இடிக்கும் பணி தொடங்கிவிட்டது.

தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இடிக்கப்படும் பள்ளி கட்டடங்களை பொறுத்து அங்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details