தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலமா பணியாளர்களும் இனி மானிய விலையில் டூவீலர் வாங்கலாம் - வேலூர் ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு! - வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ குமாரவேல்

வேலூர் மாவட்டத்தில் வக்ஃபு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க, மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்து உள்ளார்.

Vellore District Collector P Kumaravel
வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ குமாரவேல்

By

Published : Aug 17, 2023, 2:15 PM IST

வேலூர்:வக்ஃபு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள 110 வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியை செம்மையாகவும், சிறப்பாகவும் செய்வதற்கும், சமயப்பணி ஆற்றுவதற்கும் புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இரு சக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூபாய் 25 ஆயிரம் இதில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளில் கல்வி, வயது குறித்த விவரங்களில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசால் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:இரும்புப் பெட்டிக்குள் புதையலா?.. பெட்டியை திறக்கும் பல மணி நேர போராட்டத்தில் கிடைத்தது என்ன?

அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான உலமா பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க தமிழகத்தில் வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள வக்ஃபு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவராகவும், 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான (ககத) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 110 வக்ஃபு நிறுவனங்களில் ஒவ்வொன்றிலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் பேஷ் இமாம், அரபிக் ஆசிரியர்கள், மோதினார், முஜாவர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.

தகுதியுள்ள உலமா பணியாளர்கள் இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்கள், படிவத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்திற்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பித்து பயன் பெறலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அறுவை சிகிச்சைக்காக ஆதார் அட்டை, காப்பீடு திட்டம் வழங்க முதலமைச்சருக்கு கூலித்தொழிலாளி கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details