அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்துவந்த தேமுதிகவிற்கு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகக் குறைந்த இடங்களையே அதிமுக ஒதுக்க முன்வந்தது. இதனால் அக்கூட்டணியிலிருந்து தேமுதிக நேற்று வெளியேறியது. இதையடுத்து, தேமுதிக துணைச் செயலர் எல்.கே.சுதீஷ், அதிமுக குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் அவதூறாகப் பேசியதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.
எல்.கே.சுதீஷின் உருவ பொம்மையை எரித்த அதிமுகவினர் - LK Sudesh speaks slanderously about AIADMK
வேலூர்: தங்கள் கட்சி குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி தேமுதிக துணைச் செயலர் எல்.கே.சுதீஷின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
vellore admk carders burnt the effigy of LK Sudheesh
இந்நிலையில், காட்பாடியைச் சேர்ந்த அதிமுகவினர் காங்கேயநல்லூர் பெரியார் சிலை அருகே தேமுதிக துணைச் செயலர் எல்.கே.சுதீஷின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவரைக் கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர்.
பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற விருதம்பட்டு காவல் துறையினர், உருவ பொம்மை மீது தண்ணீர் ஊற்றி அணைத்து, பொம்மையை அப்புறப்படுத்தினர்.