வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சி. சண்முகம் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். தோல்விக்குப் பிறகு ஏ.சி. சண்முகம் திடீரென செய்தியாளர்களை சந்தித்தார்.
370 சட்டப்பிரிவு நீக்கம்தான் என் தோல்விக்கு காரணம் - ஏ.சி. சண்முகம்! - காஷ்மீர் 370 பிரிவு சட்டம் தான் என் தோல்விக்கு காரணம்
வேலூர்: முத்தலாக் சட்டமும், காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கமும்தான் என் தோல்விக்கு காரணம் என வேலூரில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், திமுக சிறுபான்மை மற்றும் இஸ்லாமிய ஓட்டுகளை பெற்று வென்றிருக்கிறார்கள். குறிப்பாக சமுதாய பெயரை சொல்லி, அழுது இந்த வெற்றியை பெற்றுள்ளார்கள். மக்கள் என்னை கைவிட்டாலும், நான் மக்களை கைவிட மாட்டேன் என கூறினார்.
மேலும் அவர், வேலூர் மக்களவைத் தேர்தல் இவ்வளவு விரைவாக நடக்க நான்தான் காரணம். ஆனால் நூல் இலையில் எங்கள் வெற்றி பறிபோனது. மத்திய அரசு கொண்டு வந்த முத்தலாக் சட்டமும், காஷ்மீரின் 370 சட்டப்பிரிவு நீக்கமும்தான் நான் தோல்வி அடைய காரணம் என தெரிவித்தார்.