ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், வேலூர் தொகுதிக்கு மட்டும் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு! - அதிமுக வேட்பாளர்
வேலூர்: மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பாக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை மீண்டும் அறிவித்துள்ளது.
vellore
இந்நிலையில், வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அத்தொகுதியில் அதிமுக சார்பாக புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஏற்கனவே, செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஏ.சி.சண்முகம் வேலூரில் போட்டியிடுவார் என்றும் கூறியுள்ளது. இதே தொகுதியில், திமுக சார்பாக கதிர் ஆனந்த் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Jul 6, 2019, 12:44 PM IST