வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பட்டேல் யாகூப் சாகித் வீதியை சேர்ந்தவர் தவூசிஃப். இவர் தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார், நேற்று இவர் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். இவரது மனைவி வாணியம்பாடி சி.எல்.சாலையில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். தவூசிஃப் பணி முடித்து தனது மாமியார் வீட்டிற்கு சென்று அங்கிருந்து கணவன் மனைவி இருவரும் இன்று காலை சென்னை செல்வதாக திட்டமிட்டுள்ளனர்.
இதனையறிந்த அடையாளம் தெரியாத நபர், நேற்று இரவு தவூசிஃப் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து மாடிக்கு சென்று அங்கிருந்த மூன்று பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 22 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்துவிட்டு பின் வீட்டின் சோபாவில் அமர்ந்து குளிர்பானம் மற்றும் சாக்லேட்டை சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளான்.