வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மாதனூர் அடுத்த பாலூர் பகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரப்புரை மேற்கொண்டார்.
தேர்தல் விதியை மீறிய அரசு உழியர்கள்: அமைச்சருக்கு சால்வை அணிவித்து கவுரவிப்பு! - Election violation
வேலூர்: தேர்தல் விதிமுறையை மீறிய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கிராம உதவியாளர்கள் சால்வை அணிவித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
அப்போது அதேக் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளர் ரமேஷ், பெரியவரிகம் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் லோகேஷ், நரியாம்பட்டு கிராம நிர்வாக உதவியாளர் ஜெகன், பாலப்பாடி கிராம நிர்வாக உதவியாளர் ஜெய்சங்கர் ஆகியோர் அமைச்சருக்கு சால்வை அணிவித்துள்ளனர்.
தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும்நிலையில் அரசு ஊழியர்கள் அமைச்சரை சந்தித்து சால்வை அணிவித்த சம்பவம் குறித்து சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டனர். எனவே தேர்தல் விதிமுறையை மீறிய அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.