வேலூர் மாவட்டம், வாணியம்பாடி ரயில் நிலையத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்தப் போவதாக வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில், நேற்று மாலையிலிருந்தே அலுவலர்கள் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரு செல்லும் சேஷாத்திரி எக்ஸ்பிரஸில் பயணிப்பதற்காக மூட்டைகளுடன் ரயில் நிலையத்தில் காத்திருந்த கடத்தல்காரர்கள், அலுவலர்களைப் பார்த்ததும் மூட்டைகளை அங்கேயே விட்டுத் தப்பியோடினர்.
அவர்கள் விட்டுச்சென்ற மூட்டைகளை சோதனை செய்ததில், அதிலிருந்தது ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது. மொத்தம் 23 மூட்டைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல்செய்த அலுவலர்கள், இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.