வேலூர்:வேலூரில் கம்பிலோடு இறக்கிவிட்டு, பெங்களூரு நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த லாரியை மேல்மொணவூர் அருகே பெருமாள் நகர் கீர்த்தி ஷூ கம்பெனி எதிரில், லாரி ஓட்டுநர் நிறுத்தி உள்ளார்.
அப்போது திருவலம் குப்பிரெட்டி தாங்கல் பகுதியைச் சேர்ந்த அஜய் கீர்த்தி, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்கத்தில் மோதி இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் அருகில் இருந்த நபர்கள் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து விபத்தில் அஜய் கீர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் உடனடியாக ராஜசேகரை மட்டும் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.