வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள காப்புக்காட்டில் வனச்சரக அலுவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் விதமாக காட்டுக்குள் சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை கைது விசாரணைநடத்தினர்.
கம்பிவேலி அமைத்து வேட்டைக்குக் காத்திருந்த இருவர் கைது! - vellore
வேலூர்: காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாட கம்பி வேலி அமைத்து சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை வனச்சரக அலுவலர்கள் கைது செய்தனர்.
two young boys arrested near vellore
விசாரணையில் காட்டுக்குள் அவர்கள் கம்பிவேலி அமைத்து விலங்குகளை வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் வந்திருந்தனர் என்பதும், அவர்களின் பெயர் வெங்கடேசன், சரத்குமார் என்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் மாவட்ட வன அலுவலர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.