திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் கற்பழிப்பு வழக்கில் கைதாகி 12 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று மத்தியச் சிறையில் இருந்தார். இவர் கடந்த 3 ஆம் தேதி பிற்பகல் சிறைக்கு வெளியே உள்ள விவசாய தோட்டத்தில் வேலை செய்து விட்டு மதிய உணவுக்காகச் சிறைக்குச் செல்லும் போது தப்பியோடினார். இச்சம்பவம் வேலூர் சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
சிறையில் கைதி தப்பி ஓட்டம்; காவலர்கள் பணியிடை நீக்கம்! - prisoner
வேலூர்: சிறையில் கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் இரண்டு காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் சிறை
இந்நிலையில் கைதி தப்பியோடியது தொடர்பாக வேலூர் மத்தியச் சிறை முதன்மை தலைமைக் காவலர் குமரவேல், தலைமைக் காவலர் திருமலை ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக சிறைத் துறை உத்தரவிட்டுள்ளது.