வேலூர்: அரியூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர், மூர்த்தி (51) மற்றும் திருப்பத்தூர் மாவட்டம், குருசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சம்பத்குமார் (60), ஆகிய இருவரும் பல்வேறு ஊரில் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள 57 பேரிடம் சுமார் 1 கோடியே 22 லட்சம் ரூபாய் பெற்று போலி பணி ஆணைகளை வழங்கி மோசடி செய்ததாக வேலூர் குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராணுவத்தில் வேலை எனக்கூறி 57 பேரிடம் பண மோசடி: எவ்வளவு தெரியுமா? - etv bharat tamil
ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 57 பேரிடம் 1 கோடியே 22 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணுவத்தில் வேலை என கூறி பண மோசடி
இக்குற்ற சம்பவத்தில் மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகர் ராணுவ முகாமிலிருந்து பணி ஆணை வழங்கியது போல் போலி ஆவணம் தயாரித்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இதையும் படிங்க: நூதன திருட்டில் ஈடுபட்ட வங்கி ஊழியர் - சிக்கியது எப்படி?