வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னகொம்பேஸ்வரம் பகுதியில் சாலையோரம் லாரியை நிறுத்தி வைத்து ஓட்டுநர் உறங்கிகொண்டிருந்தார். அப்போது ராணிப்பேட்டையிலிருந்து தோல் பொருட்களை ஏற்றி ஆம்பூர் நோக்கி வந்த மற்றொரு லாரி, நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் பாலாஜி, உதவியாளர் அஜித் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் இருவர் பலி - lorry accident
வேலூர்:ஆம்பூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, பின்பக்கமாக வந்த மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் இருவர் பலி!!
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.