தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பை கொட்டுவதை வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200 பரிசு; வேலூர் மேயர் அதிரடி அறிவிப்பு - மேயர் சுஜாதா

பொது இடங்களில் குப்பை கொட்டுவதை வீடியோ எடுத்து அனுப்பினால் 200 ரூபாய் அன்பளிப்பு அளிக்கப்படும் எனவும், குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ.100 முதல் 1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மேயர் சுஜாதா அறிவிட்டுள்ளார்.

குப்பை கொட்டுவதை வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200 பரிசு; மேயர் அதிரடி அறிவிப்பு
குப்பை கொட்டுவதை வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200 பரிசு; மேயர் அதிரடி அறிவிப்பு

By

Published : Oct 11, 2022, 7:09 AM IST

Updated : Oct 11, 2022, 10:22 AM IST

வேலூர்:வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கும் நடைமுறை அகற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதமும், அதை வீடியோ ஆதாரமாக அனுப்புபவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்படும் என வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016-ன் கீழ் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் வீடுகளுக்கு ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படவுள்ளன.

தெருக்கள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையைக் கொட்டினால் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும். வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே எரித்தால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும். அதே நேரம், குப்பையை தெருக்களில் கொட்டுபவர்களை வீடியோ எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு அன்பளிப்பாக ரூ.200 வழங்கப்படும் என வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க மனு; அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Oct 11, 2022, 10:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details