வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் முருங்கை பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ஓர் உணவகத்தில் வேலூரைச் சேர்ந்த ஆசிப், நாவஸ் ஆகியோர் உணவருந்தினர். பின் சாலையைக் கடக்காமல், இருசக்கர வாகனத்தில் அதே சாலையில் விதிகளுக்கு புறம்பாக சென்றுகொண்டிருந்தனர்.
இளைஞர்களின் அலட்சியத்தால் விபத்து - இருவர் பலி - accident
வேலூர்: ஆம்பூர் அருகே கார் மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
இளைஞர்களின் அலச்சியத்தால் விபத்து
அப்போது, சென்னையிலிருந்து பெங்களூரை நோக்கிச் சென்ற கார், இவர்கள் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் காவல் துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.