வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பீஞ்சமந்தை, பாலம்பட்டு ஜார்தான்கொள்ளையை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு 100 நாள் வேலை திட்டம், வீட்டுமனை பட்டா, சாலை வசதி என பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் வோலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அடிப்படை வசதி செய்து தரக்கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் - Tribals protest in vellore
வேலூர்: சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Protest
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் கே. சுப்பராயன் எம்.பி., தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
TAGGED:
Tribals protest in vellore