வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியிலிருந்து சென்னைக்கு புதிய குளிர்சாதன சொகுசுப் பேருந்தை அமைச்சர் கே.சி. வீரமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் குளிர்சாதன சொகுசுப் பேருந்தை சிறிது தூரம் அமைச்சர் ஓட்டிச்சென்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி. வீரமணி, ”பாதாளசாக்கடை திட்டத்திற்காக ஜெயலலிதா பத்து கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த அரசு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கி பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றவும், பழுதடைந்த சாலைகளை சரி செய்யவும் துரிதமாக பணிகள் செயல்பட்டு விரைவில் பணியை முடித்துவிடுவோம்” என்று கூறினார்.