திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் ஆதரவற்றோர் உடல்களை அரசு மருத்துவமனைகளிலிருந்து உரிய அனுமதி பெற்று நல்லடக்கம் செய்துவருகிறார்.
இதனையடுத்து இன்று (செப். 23) வேலூர் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் உள்ள ஆறு சடலங்களைப் பெற்று, வேலூர் புதிய பேருந்து நிலையம் பாலாற்று படுக்கையில் உள்ள ஈடுகாட்டில் உரிய முறையில் நல்லடக்கம் செய்தார்.