தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் அமைச்சர்கள் பொங்கல் பரிசு வழங்கல்! - ministers nilofer kafeel, kc veeramani

திருப்பத்தூர்: வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 987 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசினை அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் வழங்கினர்.

tirupattur-pongal-freebies-distributed-by-ministers-nilofer-kafeel-kc-veeramani
திருப்பத்தூரில் அமைச்சர்கள் பொங்கல் பரிசு வழங்கல்!

By

Published : Jan 5, 2020, 11:14 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுடன் சுமார் 2 கோடியே 50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் 2 ஆயிரத்து 245 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வள்ளிபட்டு கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் மஞ்சள், 5 கிராம் உலர் திராட்சை, கரும்பு துண்டு, ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் 987 குடும்ப அட்டைதாரர்களுகு வழங்கினர்.

பின்னர் பேசிய அமைச்சர் கே.சி. வீரமணி, தமிழ்நாடு மக்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளைக் கொண்டாட சாதி, மதம், கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரசு வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

பின்னர் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், ‘நாட்டின் முன்னேற்றத்திற்காக விவசாய, தொழில் துறையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு முறை தமிழ்நாட்டில் கொண்டுவந்து கோடிக்கணக்கான உலக முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்கி லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்’ என்றார். இந்த விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி. சம்பத்குமார், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூரில் அமைச்சர்கள் பொங்கல் பரிசு வழங்கல்!

இதையும் படியுங்க: பொங்கல் பரிசுகள் வழங்கல் விழா: அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்!

ABOUT THE AUTHOR

...view details