தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் தொடர் திருட்டு! வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கைது - வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கைது

வேலூர்: சாத்துவாச்சாரி பகுதியில் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவரகள்

By

Published : Jun 13, 2019, 12:31 PM IST

வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சத்துவாச்சாரி பகுதியில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுவருவதாக சாத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை காவலர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதிகள், குடியிருப்புப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் சாத்துவாரியில் உள்ள வீட்டில் நேற்றிரவு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனில் (21), காளிச்சரன் (34), மகேந்திரா (40) ஆகிய மூவரையும் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இவர்கள் வேலூரில் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சாத்துவாச்சாரி பகுதியில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது

லும் பகல் நேரங்களில் பலூன், பானிபூரி, பல்பு விற்பது உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வீடுகளை நோட்டம்விட்டு, இரவு நேரங்களில் அங்கு சென்று திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details