திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் அதிகளவு விபத்து நடைபெறுவதாகவும் போக்குவரத்து நெரிசல் உள்ளதாகவும் மக்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து போக்குவரத்து முதன்மைச் செயலாளர் ஜவஹர் உத்தரவின்பேரில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப. சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் அடிப்படையில் வாணியம்பாடி போக்குவரத்து ஆய்வாளர் காளியப்பன், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் செந்தில்குமார், சாலைப் பாதுகாப்புப் பிரிவு அலுவலர் அசோக்குமார், ஆம்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சச்சிதானந்தன், ஆம்பூர் நகர ஆய்வாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது.