தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளியை மூட வேண்டாம் - தரம் உயர்த்த மாணவர்கள் கோரிக்கை

வேலூர்: திருப்பத்தூர் அருகே பள்ளிக் கூடத்தை மூடும் முடிவை கைவிட வேண்டும் என விளம்பர பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளியை மூட வேண்டாம் - தரம் உயர்த்துங்கள் என மாணவர்கள் கோரிக்கை

By

Published : Jul 3, 2019, 3:24 PM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்தலி ஒன்றிய ஆவல்நாயக்கம்பட்டில் ஊராட்சியில் ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் 3 மாணவர்களும், இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவியும், மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்பில் 7 மாணவர்கள் என மொத்தம் 11 மாணவ மாணவிகள் மட்டுமே கல்வி பயில்கின்றனர். மணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் இப்பள்ளியை மூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பள்ளி மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியை மூட வேண்டாம் என சில தினங்களுக்கு முன் விளம்பர பதாகைகளை ஏந்தி நடை பயணம் மேற்கொண்டனர். இதில் ஊர் பொதுமக்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இப்பள்ளியை முடினால் இங்கு படிக்கு 11 மணவர்களிள் படிப்பு வினாகி விடும். குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பிக்கும் வகையில் அரசு ஆரம்ப பள்ளியை தரம் உயர்த்தினால் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை உயரும், எனவே இப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளியை மூட வேண்டாம் - தரம் உயர்த்துங்கள் என மாணவர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details