வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தார்.
பள்ளி வாகனங்களை பறிமுதல் செய்த வட்டார அலுவலர்கள்! - பள்ள வாகனம்
வேலூர்: திருப்பத்தூரில் பதிவு எண் இல்லாமலும், தர ஆய்வு செய்யாமலும் இயங்கிய பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
school vehicle
அப்போது, தனியார் பள்ளிகளிலிருந்து வந்த பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டதில், இரண்டு பேருந்துகள் பதிவு எண் இல்லாமலும், இரண்டு பேருந்துகள் முறையான தர ஆய்வு செய்யாமலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருப்பத்தூர் கிராமிய காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.