வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த அதிமுக இலக்கிய அணி மாவட்ட செயலாளர் டைகர் இளங்கோ, அதிமுக ஒன்றியச் செயலாளர் போலீஸ் பெருமாள், மேலும் மூன்று பேர் காரில் ஆதியூர் கூட்டுரோடு பகுதியில் உள்ள திருப்பத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜாவின் வீட்டிற்குச் வந்துகொண்டிருந்தனர்.
தனியார் பேருந்து மோதி கார் விபத்து தனியாருக்குச் சொந்தமான பேருந்து திருப்பத்தூரிலிருந்து தருமபுரி மாவட்டம் மொரப்பூரை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது வேகமாக மோதியது.
இதனால், நிலைதடுமாறிய கார் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் காரில் சிக்கியிருந்த நபர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் அனுப்பிவைத்தனர்.
இதையும் படிக்க: வாழைத் தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்..!