வேலூர்:சலவன்பேட்டை பகுதியில் உள்ள ஆணை குளத்தம்மன் கோயில் பின்புறம் இருக்கும் கொசப்பேட்டை பகுதியில் இஷ்ட தேவதை கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரு மர்ம நபர், சாமி கும்பிடுவதைப் போல் சன்னதிக்குள் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சன்னதிக்குள் யாரும் இல்லாததை அறிந்து, மர்ம ஆசாமி சாமி கும்பிடுவது போல் நடித்து, அம்மன் கழுத்திலிருந்த தங்கத் தாலியை திருடிச் சென்றுள்ளார்.
பின்னர் கோயில் சன்னதிக்குச் சென்று பார்த்த கோயில் நிர்வாகிகளுக்கு, அம்மன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், வேலூர் தெற்கு காவல்துறையினர், அம்மன் கழுத்திலிருந்த தங்கத்தாலியை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து சிசிடிவி காட்சிப் பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.