வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (63). மத்திய அரசு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ஓய்வு பெற்ற பொறியாளர் வீட்டில் திருட்டு: திருடிய நபரே பணம், நகையை ஒப்படைத்தார்! - vellore theft
வேலூர்: வள்ளலார் பகுதியில் ஓய்வு பெற்ற பொறியாளர் வீட்டில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், திருடிய நபரே பணம், நகையை ஒப்படைத்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இவரின் மனைவி உயிரிழந்த நிலையில், தனது மகனுடன் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் 8 மாலை சந்திரன் மகனை அழைத்துக்கொண்டு விருதம்பட்டில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டு இரவு மீண்டும் வீடு திரும்பியு போது வீட்டில் இருந்த பீரோல் பூட்டை உடைத்து அதில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை யாரோ கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.திருடிச் சென்ற நபர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து வேலூர் மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று(நவ. 10) வீட்டில் இருந்து திருடப்பட்ட 2.3 கிலோ தங்க நகை மற்றும் 8 லட்சம் பணத்தை திருடிய நபரோ சந்திரனிடம் ஒப்படைத்துவிடும் படி அவரது உறவினர் வீட்டில் பணம் மற்றும் நகையை கொடுத்துச் சென்றுள்ளார்.