தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து நிலையம் அருகே இளைஞர் அடித்துக் கொலை - youth beaten

வேலூர்: திருப்பத்தூர் அடுத்த கருப்பனூர் பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து நிலையம் அருகே இளைஞர் அடித்து கொலை

By

Published : Jun 19, 2019, 11:52 PM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த்(22). இவர் நேற்று இரவு இரண்டு மணியளவில் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியின், பிள்ளையார் கோயில் தெருவில் ஒருவர் மரணம் அடைந்திருந்தார். அதற்காக உறவினர்கள் சிலர் மரணம் அடைந்தவரின் வீட்டின் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.

பேருந்து நிலையம் அருகே இளைஞர் அடித்துக் கொலை

அப்போது, அவ்வழியே வந்த பிரசாந்த், எதிர்பாராத விதமாக அவர்கள் உறவினர்கள் அமர்ந்திருந்த நாற்காலியின் மீது இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார். இதனால், அங்கு மது போதையில் இருந்த கண்ணதாசன், சரவணன், பூங்காவனம், காந்தி அகியோர் பிரசாந்த்தை சரிமாரியாகத் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த பிரசாந்த் மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்பு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு பிரசாந்த்தை பரிசோதித்த மருத்துவர்கள், இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்தின் பெற்றோர்கள், உறவினர்கள் கண்ணதாசனின் வீட்டை அடித்து நொருக்கியுள்ளனார். மேலும், பிரசாந்த்தை தாக்கியவர்களை கைது செய்யும் படி திருப்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details