வேலூர்:வேலூரில் உள்ள ஏழு ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், மாவட்டத்தில் பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், குடியாத்தம் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை கே.எம்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் எண்ணப்பட்டது.
இந்த ஒன்றியத்திற்குட்பட்ட மோர்தானா ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சீதாராமன், பரந்தாமன், பங்காரு என்ற மூவர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவின்போது, பரந்தாமன் 464 வாக்குகளும், சீதாராமன் 462 வாக்குகளும், பங்காரு 324 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து, தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.