வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பள்ளிக்கொண்டா பகுதியில் உள்ள நீர்வளத்துறையின் கால்வாய்களை ஆய்வு செய்வதற்காக நேற்று (நவ.22) பள்ளிகொண்டா நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பொய்கை அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் ஒருவர் ஆட்டோ மோதியதில் படுகாயம் அடைந்திருந்தார்.
இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி பொது மக்கள் உதவியுடன் காயம் அடைந்த முதியவரை மீட்டு முதலுதவி செய்து ஆட்டோவில் ஏற்றி பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.
சாலை விபத்தில் காயமடந்த முதியவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனை வரை சென்ற ஆட்சியர் மேலும் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியரின் இத்தகைய செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை விமானநிலையத்தில் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு: பின்னணி என்ன?