வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அனைத்து வார்டுகளுக்கும் முறையான கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் மிக மோசமாக நடந்து வருவதாகவும், வேலூர் மாநகராட்சியின் அலுவலக நிலையைக் கண்டித்தும், ஊழல் நடைபெறுவதாகவும் கூறி வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில், பாதுகாப்பு பேரிகார்டு தடுப்புகளைத் தாண்டி, மாநகராட்சி சுற்றுச்சுவரை ஏறி குதித்து, பாஜகவினர் மாநகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து மேயர் அறையை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் மாநகராட்சி அலுவலகத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்ட நிலையில், பாஜகவினர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
மாநகராட்சி அலுவலகத்தில் புகுந்து மேயர் அறையை முற்றுகையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் முறையாக நடைபெறவில்லை: வேலூர் மேயர் அறையை முற்றுகையிட்ட பாஜகவினர் இதையும் படிங்க:எல்லைப்பகுதியில் 5ஜி சேவையை வழங்கும் சீனா... 4ஜியை கூட வழங்காத நிலையில் இந்தியா!