தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்! - ஆசிரியர் சஸ்பெண்ட்

வேலூர்: காட்பாடி அரசினர் நிதியுதவி பள்ளியின் ஆசிரியர் ஒருவர், அப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

teacher-suspended-for-molesting-student
teacher-suspended-for-molesting-student

By

Published : Mar 4, 2020, 8:01 PM IST

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அரசினர் நிதியுதவிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் சுரேஷ்பாபு. இவர் ஆறாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியை தனியாக அழைத்துச் சென்று மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவிகள், அச்சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோல பல மாணவிகளை ஆசிரியர் சுரேஷ்பாபு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததையடுத்து, அப்பள்ளியில் தலைமையாசிரியர் சந்திர தேவநேசன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சுரேஷ்பாபுவை பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் நிஷாந்தி, சங்கீத் ஆகியோர் சம்மந்தபட்ட ஆசிரியரை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

ஏற்கெனவே இதே ஆசிரியர் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், இருப்பினும் இந்த ஆசிரியர் மீது எவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அப்பள்ளி மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த சடலம் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details