தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் சதமடித்த வெயில் - temperature

வேலூரில் படிப்படியாக உயர்ந்து வெப்பம் இன்று 110.1 பாரன்ஹீட்டாகப் பதிவாகி உள்ளது.

வேலூரில் கொளுத்தும் வெயில்
வேலூரில் கொளுத்தும் வெயில்

By

Published : Apr 2, 2021, 11:04 PM IST

வேலூர் மாவட்டத்தில் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக இருக்கும்.

தற்போது, நாளுக்கு நாள் வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெயில் காலம் தொடங்கிய நாளில் இருந்து இன்று அதிகபட்சமாக (ஏப்ரல். 02) 110.1 பாரன் ஹீட் அளவிற்கு வெப்பம் பதிவாகி உள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு (மார்ச் 30) 106.3 பாரன் ஹீட்டும்; நேற்று முன்தினம் (மார்ச் 31) 106.7 பாரன்ஹீட்டும், நேற்று (ஏப்ரல் 01) 109.2 பாரன்ஹீட்டுமாக இருந்த வெப்பம் இன்று (ஏப்ரல் 02) 110. 01 பாரன்ஹீட்டாகப் பதிவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details