பெங்களூர் மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் மோகன் என்பவருக்கும், வேலூரை அடுத்த தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் பெங்களூருவில் வாழ்ந்துவந்தனர்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரி தொரப்பாடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். ஆனால் அவர் மீண்டும் கணவர் வீட்டுக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.