வேலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் ஆய்வுமேற்கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளர் ராஜிப் குமார் சென் இன்று வருகைதந்தார். அவரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஷ், அரசு அலுவலர்கள் வரவேற்றனர்.
அதன்பின் அவர், பல்வேறு அரசுப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வுமேற்கொண்டார். அதில் குறிப்பாக மேல்மணவூர் அரசு உயர்நிலைப்பள்ளி சென்ற அவர், பள்ளியின் கணினி வகுப்பறை, ஸ்மார்ட் வகுப்பு நடத்தப்படும் முறை குறித்து கேட்டறிந்தார்.