வேலூர் மாநகராட்சியில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட 25ஆவது வார்டு கவுன்சிலர் கணேஷ் சங்கர், கடந்த 8 மாதங்களாக தனது வார்டில் பன்றிகள் அட்டகாசம் செய்து வருவதாகவும், இது குறித்து மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சிலர் பயன்படுத்துவதாகவும், மருத்துவக் கழிவுகளை கொட்டுவதோடு மட்டுமல்லாமல் அதனை எரித்து சுகாதார சீர்கேட்டை உருவாக்குவதாகவும் கவுன்சிலர்கள் தங்களது புகார்களை தெரிவித்தனர்.
பின்னர் பேசிய மாநகராட்சி மேயர் சுஜாதா, “தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கட்டுப்படுத்த மாவட்ட காவல் துறையினரிடம் தெரிவித்து, அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தி கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.