வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா கொசவன் புதூர் மேட்டுத் தெரு பகுதியில் வசிப்பவர் முருகேசன். இவரது மனைவி காஞ்சனா. முருகேசன் வெளியூரில் வேலை செய்து வருவதால் காஞ்சனா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டில் மின் கட்டணம் அளவீடு செய்ய வரும் மின்சார ஊழியர் ஒருவர், தன்னை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டுவதாக காஞ்சனா இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: நடவடிக்கை கோரி மனு - against EB officer
வேலூர்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு மின் ஊழியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் புகாரில் அவர், தனது வீட்டுக்கு பி.கே.புரம் மின் பிரிவிலிருந்து ரீடிங் எடுக்க வருபவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். கடந்த 5 மாதமாக அவர் தன் ஆசைக்கு இணங்கும்படியும், இல்லையென்றால் மின் இணைப்பை துண்டித்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்போது அந்த நபர் தன் கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தான் அவரை திட்டி அனுப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பி.கே.புரம் மின் அலுவலகத்தில் சென்று விசாரித்தபோது, அங்கே இருந்த அலுவலர்களும் தன்னை கிண்டல் செய்து ஏளனமாக பேசியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சம்பந்தப்பட்ட மின்சார ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.