வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணுப் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனக்குச் சொந்தமான செங்கல் சூளையில் கடந்த ஒரு வருட காலமாக ஒரு குழந்தை, இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி வருவதாக ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத்துக்கு வந்த ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து சார் ஆட்சியர் அங்குசென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கொத்தடிமைகளாக இருந்தவர்களை மீட்ட சார் ஆட்சியர்; குவியும் பாராட்டுகள்! - rescued
வேலூர்: புளியங்கண்ணு பகுதி செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 5 பேரை மாவட்ட சார் ஆட்சியர் மீட்டுள்ளார்.
அப்போது செங்கல்சூளை நடத்தி வந்த பார்த்திபன், காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த மானாமதிபெருமாள்சேரி என்ற பகுதியைச் சேர்ந்த சண்முகம்(35), அஞ்சலி(30), ரமேஷ் (32), செல்வி(26), தினேஷ்(8) ஆகிய 5 பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கொத்தடிமைகளாக, செங்கல் சூளையில் வேலை வாங்கி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த ஐந்து பேரையும் மீட்ட சார் ஆட்சியர் இளம்பகவத், செங்கல் சூளையில் உரிமையாளரான பார்த்திபனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன் பின் மீட்கப்பட்டவர்களுக்கு விடுப்பு சான்றிதழையும் உணவு, உடைகளையும் வழங்கி, அவர்களது சொந்த ஊர் திரும்பத் தேவையான உதவித் தொகையையும் வழங்கினார். கொத்தடிமைகளாக இருந்தவர்களை மீட்ட சார் ஆட்சியருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.