வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலை கொத்தனூர் கிராமத்தில் ஒற்றைக் காட்டு யானை நடமாடிவருகிறது. அந்த யானை நேற்று இரவு கொத்தனூர் மலைப் பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவரது வீட்டையும் அவரது தோட்டத்தில் பயிரிடப்பட்ட வாழை மரங்களையும் சேதப்படுத்தியது.
ஒற்றைக் காட்டு யானை: பீதியில் மக்கள்! - காட்டு யானை
திருப்பத்தூர்: ஜவ்வாது மலை அருகே ஒற்றைக் காட்டு யானை வீடு மற்றும் வாழை தோட்டங்களை சேதப்படுத்தி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
single-elephant-damages-houses-near-thirupathur
காலையில் இதனைக் கண்ட கண்ணன் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த வனத் துறை அலுவலர்கள் உடனடியாக அந்த யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும், எனவே மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே தனியாக நடமாட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இந்த யானையானது 6 மாதங்களுக்கு முன் ஏலகிரி வனப்பகுதியிலிருந்து விரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.