தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் - ஏழு பேரை தேடும் பணி தீவிரம் - வேலூரில் ஒரு டன் செம்மரக்கட்டைகள்

வேலூர்: காட்பாடி அருகே சரக்கு வாகனத்தில் கடந்த முயன்ற ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, தப்பியோடிய ஏழு பேர் தீவிரமாக தேடப்பட்டுவருகின்றனர்.

vellore
vellore

By

Published : Mar 6, 2020, 12:46 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த சேர்க்காடு வழியாக செம்மரம் கடத்தப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து காட்பாடி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சித்தூரிலிருந்து சேர்க்காடு வழியே வந்த மூன்று சரக்கு வாகனங்களின் ooட்டுநர்கள் உள்பட ஏழுபேர், காவல் துறையினரை கண்டவுடன் இரண்டு வாகனங்களை நிறுத்திவிட்டு மற்றொரு வாகனத்தில் தப்பியோடினர்.

சந்தேகமடைந்த காவல் துறையினர் அந்த இரண்டு வாகனங்களையும் சோதனையிட்டதில், அதில் ஒரு டன்னுக்கும் அதிகமான செம்மரக் கட்டைகள் கடத்திவரப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன்பின் அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details