வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பழைய காட்பாடியை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகன் நெடுமாறன், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறான். நேற்று (ஜூன் 8) பள்ளி விடுமுறை என்பதால் நெடுமாறன் வீட்டிற்கு தெரியாமல் ஓடையில் குளிக்க சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக நெடுமாறன் நீரில் மூழ்கி பலியாகி இருக்கிறான்.
காட்பாடி அருகே சோகம்: ஓடையில் குளித்த சிறுவன் பலி - ஓடை
வேலூர்: காட்பாடி அருகே ஓடையில் குளித்த பத்து வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதமாக பலியானர்.
இதையறியாத நெடுமாறனின் பெற்றோர் மகனைக் காணவில்லை என காட்பாடி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 9) காலை ஈசன் ஓடை பகுதியில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக பொது மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு காமாட்சியை வரவழைத்து அது நெடுமாறன் தானா என்பதை உறுதிசெய்தனர். பின்னர் நெடுமாறன் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.