வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு ஊராட்சியில் ஆறு மாதங்களாக முறையாக குடிநீர் வரவில்லை என்று சில மாதங்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போதுஒருவார காலத்திற்குள்குடிநீர் பிரச்னை சரிசெய்யப்படும் எனஅதிகாரிகள்உத்திரவாதம் அளித்தனர்.
குடிநீர் வரல... காலி குடங்களுடன் சாலை மறியல்!
வேலூர்: திருப்பத்தூர் அருகே ஆறு மாத காலமாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆனால், தற்போதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி மீண்டும் இன்று (மே 13) காலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திருப்பத்தூர் - ஆலங்காயம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருவர் கூட மறியல் நடந்த இடத்திற்கு வரவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் திருப்பத்தூர் - ஆலங்காயம் சாலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.