வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை அடுத்த வீராங்குப்பம் பகுதியில் இன்று காலை பெரும் விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகினர்.
ஆம்பூரில் வாகன விபத்து - 2 பேர் பலி - விபத்து
வேலூர்: ஆம்பூர் அருகே தொழிற்சாலை வாகனம் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ACCI
மேலும் படுகாயம் அடைந்த மூன்று பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.