தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு!! - Vellore

வேலூரில் கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Etv Bவேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு!!harat
Etv வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு!!Bharat

By

Published : Aug 5, 2022, 11:41 AM IST

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் வேலூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வேலூர் மாநகரின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதேபோல வேலூர் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஜவ்வாது மலை தொடரிலும் கனமழை பெய்ததால் அமிர்தி கட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அமிர்தியில் இருந்து ஜமுனாமத்தூர் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொது மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு!!

இதேபோல் மேல்அரசம்பட்டு உத்திர காவேரி ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

இதையும் படிங்க: மூவர்ணத்தில் ஜொலிக்கும் வேலூர் கோட்டை...!

ABOUT THE AUTHOR

...view details