வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கூட்டுச்சாலையில் காவல் துறையினர் இன்று அதிகாலை அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டெல்லி பதிவு எண் கொண்ட கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான வகையில் வந்து கொண்டிருந்தது.
35 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டை பறிமுதல்
வேலூர்: பள்ளிகொண்டா அருகே டெல்லி பதிவு எண் கொண்ட காரில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செம்மரக்கட்டைகள் பறிமுதல்
இதையடுத்து, அந்த காரை காவல் துறையினர் மடக்கி சோதனையிட்டபோது அதில், சுமார் 35 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்கும் என காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து கார், செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டது. பின்பு ஆம்பூர் அடுத்த குருராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ரகுமான் என்பவரை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.